Skip to main content

Posts

Showing posts from August, 2016

பிறர் பேசத்துணியா

அலுவலக முதுகிழவர் கூட்டம் ஒன்று கூட்டினா....ர் . என்ன தலைப்பில் பேசப்போகிறோம் என்று தெரியாது என்று உண்மையை உடைத்தே பேசத்துவங்கினார் .... இரண்டரை மணி நேரம்.. இதற்கு அவர் வழக்கம் போல் தலைப்புக்கொடுத்தே பேசியிருக்கலாம்....

கால்கள்

கால்கள் நகர்ந்து செல்கிறேன் நீர்வழிப் புணைபோல்... , காற்றில் சிறகாய் கடந்து செல்கிறேன்... பறந்து, பறந்து மேலே உயரே நீளும் வானில்   ... கடுவன் பாயும் கானில் நத்தையும் கூட நகரும், வலசைப் பறவை பகிரும் வாழ்வின் சாரம் இது காண் ... ஆட்டின் ரோமம் தொற்றி நிலம் தேடிச்செல்லும் விதையும், சிற்றில் நற்றூண் பற்றி நம் பாட்டி சொன்ன கதையும், பயணி ஆனதால் வாழ்கிறது வாழ்ந்து பயணித்து மீள்கிறது நடந்த நதியின் மடியில் - கடல் கடந்த கலங்கள் முதுகில்   பிறந்து வளர்ந்த நாகரிகம, பாகியானின் பையில் படர்ந்து சென்ற சமயம், யாவும் சொல்வது, கடிகார முள்ளேறி காலம் சொல்வது பெயர்ச்சி கல் , பெயர்ச்சி கொள் ! நகர்ந்து செல்கிறேன் நீர்வழிப் புணைபோல் , காற்றில் சிறகாய் கடந்து செல்கிறேன் பறந்து, பறந்து மேலே உயரே.........!

நான் ஏன் எழுதுகிறேன்?

நான் ஏன் எழுதுகிறேன்? சின்ன வயதில் இருந்தே எனக்கு பல நிறைவேறாத லட்சியங்கள் உண்டு . அஞ்சாங்ளாஸ் காலத்திலிருந்தே வீட்டில் ஒப்புமை காட்டியே ஓயாமல் திட்டிக்கொண்டிருப்பார்கள். நாமளும் ஏதாவது பண்ணுவோம் , என்ற நப்பாசையில் விஷப்பரீட்சைகளில் இறங்கி கை நிறைய மொக்கை வாங்கியதுண்டு .  வீட்டில் உள்ளவர்கள் மனம் திருந்தி பாஸ் மார்க் மட்டுமாவது எடு ராசா என்று கெஞ்ச ஆரம்பித்த   போதும் , நான் விடுவதாக இல்லை .  நண்பர்கள் எல்லாம் அதற்கேற்ப , ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அடைமொழியோடு திரிந்து கொண்டிருந்தான் , கராத்தே சதீஷ் நிறைய்ய கலர் பெல்ட்டுகளை வாங்கி வைத்திருந்தான் .ஞாயிற்றுக்கிழமைகளில் ஆள் காணாமல் போய்விடுவான் . “எங்க மாஸ்டர் நாங்க எக்ஸர்சைஸ் பண்ணும்பொது எங்க வயித்தில ஏறி நடந்து போவார் தெரியுமா “ என்று அவன் (உதார் விடுவதற்காக சொன்னானோ , உண்மையாக சொன்னானோ ) சொன்ன போதே வயிறு கலங்கியது . முனிபாபு படிப்பாளி , பார்த்திபன் என்.சி.சி   என எல்லோருக்கும் தனி அடையாளங்கள் இருந்தது . சின்ன வயதில் இருந்தே விளையாட்டு மைதானங்கள் என்றால் எனக்கு ஒவ்வாமை, எப்பொழுதும் ஓடுவதில் கடைசியாகத்தான் வருவேன் என்பதை