Skip to main content

Posts

Showing posts from 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015  இந்த வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் , எல்லாம் கடந்து கண்ணை மூடினால் நினைவில் நிற்பது இரண்டுதான் . மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை. மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை. தெய்வம் என்ற ஒன்றை  சகமனிதனிடம்  நேரில் கண்ட வருடம் இது. எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும். அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார். இங்கு எத்தனையோ பிறர்  இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம்  கடந்து மனிதர்கள்  கண்ணீர்  உகுத்தது  நம் வாழ்நாளில் நாம்  காணாதது . ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன்  சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது. அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை ,  பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை , தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும்

பி பி திரும்பி பார்த்தல் 2.0 - 2015

                                                    பி பி திரும்பி பார்த்தல் 2.0  - 2015 26. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின, எதிர்க்கட்சிகள் உண்மை நிலவரம் கேட்க, கலாம் நினைவஞ்சலிக்கு உடல்நலமின்மையால் வர முடியவில்லை என முதல்வரே சொல்ல நேர்ந்தது . 27. ஸ்டியரிங்கை பிடித்த கையோடு கேமெராவை தூக்கினார் அஜித். அப்புக்குட்டி , ஸ்ருதி என க்ளிக்கித்தள்ளினார். 28. விவசாயிகள் தற்கொலைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தியது  .     29. தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்         மரணமடைய , அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதித்தது அரசு. 30.  பருப்பு விலை ஜெட் ஏறியது, துவரம்பருப்பை துயரம் பருப்பு என பேர்மாற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன . காய்கறி விலையும்   உயர , சிக்கன் சாப்பிட்டு காலமோட்டினான் தமிழன். 31. படேல் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டுக்கு போராட, காந்தி பூமியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டி கடைசியில் பலான வீடியோவில் மாட்டி காமெடி பீஸானார்  ஹர்த்திக் படேல். 32. தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அதிகம் இருப்பதாக லாரிகளை மறித்து கட்ட
பிடரிக்கு பின்னால் திரும்பி பார்த்தல்  - 2015 கடந்த வருடத்தை (2015)  நாளை முதல் பத்திரிக்கைகள் கிழித்து தோரணம் கட்டப்போகிறார்கள் . தொலைக்காட்சியிலும்  நெட்டிலும் ஏற்கனவே  கிழிக்க ஆரம்பித்து விட்டார்கள், நாமும் கொஞ்சமாவது திரும்பிப் பார்ப்போம். டாப் 50 விஷயங்கள் - 2015  1. மேகே தாட்டுவில் அணை கட்டுவதாக கர்நாடகா வரிந்து கட்டியது.  ஆரம்பத்தில் சவுண்டு விட்ட தமிழக அரசு தற்போது மௌனம் காக்கிறது. 2. அரசு அதிகாரி முத்துக்குமார சாமி  தற்கொலை வழக்கில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தூக்கியடித்தார்கள் . இன்னும் யாருக்கும் நியாயம் கிடைத்த பாடில்லை . 3. தமிழகத்தில் கடன் சுமை மிகவும் அதிகமானதாக அறிக்கைகள் பறந்தன. 4.இந்த ஆண்டும் அதிகாரி சகாயம் தான் மக்களின் ஹீரோ , வில்லன் வேறு யார் ,தமிழக அரசு தான். அரசு இயந்திரம் படுத்திய பாட்டில் மனிதர் இரவில் குவாரியில் உறங்கி கிரானைட் வழக்கின்  தடயங்களை காப்பாற்றினார். 5. காணாமல் போனவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியின் பெயரை ஆளாளுக்கு வாசித்தார்கள், வருடம் முழுதும் அரசியல் செய்த களைப்பை !!? போக்கிக்கொள்ள மறுபடியும் புத்தாண

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத்தார் மேடையின் ஹீரோ, நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கிளர்ச்சியுறுவதை வி

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்     அந்த மனிதரைப் பற்றி பதிவிட இரண்டு நாட்களாகி விட்டது. ஆற்றாமையும் நிலைஇல்லா சிந்தனைகளுமே மனதை அழுத்தி விடுகின்றன. ஏவுகணை மனிதர் என்று அவரை ஊடகங்கள் விளிக்கின்றன,  அவரோ எளிமையின் மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் பிறருக்கு அறிவுறுத்தியதும்  அவரது வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. ஒன்றே . என் தலைமுறைக்கு  அவர் ஒரு ஊக்கமிகுந்த வழிகாட்டி , முன்மாதிரி ! அவர்போல் இன்னொரு அரசியல் சார்பற்ற தலைவர், இந்தியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது நடக்கப்போவதே இல்லை. அவரது எந்த இயல்பும் போற்றுதலுக்கு உரியதாகவே இருந்தது ,  எதைச்சொல்ல !  அவர்  ஐ ஐ டி மாணவனுக்கும் , ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் வகுப்பெடுத்தவர், அவர்தம் கேள்விகளுக்காக எப்போதும் செவி கொடுத்தவர். முதுமைக்காலத்திலும் தன ஆசிரியரின் முன் இருக்கையில் பொருந்தி அமராதவர். ஆக்கப்பூர்வமான அறிவியலின் முகவரி அவர். ஏவுகணையையும் வடிவமைத்துள்ளார்  , மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்காலையும் வடிவமைத்துள்ளார். செல்லுமிடமெங்கும் தன் மொழியின் தகைமையை , அறத்தை , ஆக்கங்களை குறள் வ

உச்சஸ்தாயி

இன்றைக்கு அலுவலக உயர்திரு அழைத்தார். அவரிடம் தாள்களை நீட்டினேன்.தினமும் கொட்டப்படும் குப்பை பற்றிய தரவுகள்.  எட்டு, ஒன்பது தேதிகளின் தாள்களை பார்த்துக்கொண்டே வந்தவர்- அடுத்து ஒன்றும் இல்லாமல் அதிர்ந்து போனார். என்னைப்பார்த்து ' பத்து எங்க..அஅஅஅஅ'.. என்றார் . மௌனம்  'பத்தாந்தேதி பேப்பர் எங்கப்பா...' கனத்த   மௌனம் ' உன்னத்தான் கேக்குறேன் மரம் மாதிரி நிக்குறியே  எங்க...  ' உச்சஸ்தாயி....கண்ணாடி  சாளரம்  அதிர்கிறது.. என்ன செய்வது.. அன்றைக்கு தேதி ஒன்பதுதான் ஆகியிருந்தது!.   

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிருக்கிறார்.    .

உயர்திரு

மேலாளருக்கு மேலான உயர்திரு ஒருவர்  இருக்கிறார்.  அவருக்கு சமீபத்தில் கிரிக்கெட் கோச் உத்தியோகம் கிடைத்தது.  ஆட்ட முடிவில் அவரணித் தலைவரிடம் பேசுகிறார்.  "சார் பேட் பாதி மேட்ச்சிலே ஒடஞ்சு போயிருச்சு" "அதனால என்ன இப்போ ? டார்கட் தான் முதல்லயே சொல்லியாச்சே!  நீ அடிக்க வேண்டியது தானே....ங்கிறேன் "  

நரை திரை மூப்பு

நமது சுற்றம் ஓர் நாளும் நம்மை ஊக்கினோர் அல்லர் .  என் குடும்பம் எஞ்ஞான்றும்  என்மனம் அறிய நடந்தது இல்லை. என் குடியினர் நமக்கு மகற்கொடை மறுப்பர். எம்புதல்வர் நாள்தோறும் எமை பள்ளி புகுந்து இறைஞ்சச்செய்வர் . எம் ஊரினர் யாவருமெனை முதுகிலே நகைப்பர். எம் மன்னனோ கோல் தவறி குடிநடத்துவான்,...... ஆயினுமென்ன? அவர் என் மக்களே !  

புத்தக தினம்

மேலாளரிடம் 'இன்று உலக புத்தக தினம் சார்' என்றேன். அன்னாரின் பதிலுரை : நாங்கள் வாழ்ந்த கிமு மூவாயிரத்து ஆண்டுகளில் இது போல் புதிது புதிதாக தினங்களை உருவாக்கும் வழக்கு இல்லை .வெறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகள் தான் இருந்தது, மேலும் இது போன்ற தினங்களால் மக்களுக்கு புத்தகத்தை ஞாபகப்படுத்தி, அவற்றை  வாங்கச்செய்ய வைக்க  பதிப்பகங்கள் செய்யும்  மாபெரும் சூழ்ச்சியே இது. இதுபோன்ற முட்டாள்த்தனங்களை முறியடிக்க நான் அமெரிக்க அதிபராகவோ அல்லது அவரது முதன்மை ஆலோசகராகவோ இல்லாமல் போனது எனது பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரின் சதி!

காய்ச்சல்

காய்ச்சல்களில் மிக மோசமானது இலக்கியக்காய்ச்சல் தான் . மருந்தே கிடையாது . சற்று எச்சரிக்கையாக இருங்கள் . ஜோக், கார்டூன் , கிசுகிசு தாண்டி கண்ணில் எதுவும் பட்டுவிடாதபடி பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. அதுவே உடல்நலம் நயக்கும்  

பழிக்குப்பழி

கெட்ட வேளைகளில் அடிக்கடி தொல்லைபேசிய நண்பனிடம் என் வலைப்பூவை படித்துப்பார் என சொல்லிவிட்டேன் ! # பழிக்குப்பழி ...

புவி நாள் ! குறுங்கவிதைகள் ..

நீர் ! பாலாற்றின் பழைய காதலி  மூன்றாம்போரின் மூலகாரணி வலஞ்சுற்றும் கோளின் பெருங்கிழத்தி  பிளாஸ்டிக் உறைகொட்டி ஊற்றுக்கண் அடைத்ததனால்  ஆற்றுக்கண் வாராக்கரு ! 

தோசை!

நண்பர் ஒருவர் அயல்பாலை தேசத்தில் பணியாற்ற சென்றார் ! அங்கும் தோசை தான் திண்கிறார் .என்ன்ன்ன...................  

தீராப்பழி !

அலுவலகத்தில் அலுவலக நண்பர் ஒருவர் திருமண  பத்திரிகை வைத்துக்கொண்டே வந்தார், ( அலுவல் நேரத்தில் தான் ). என்னருகில் வந்த போது பத்திரிகை தீர்ந்திருந்தது, விருட்டென்று வெளிச்சென்றவர் மீண்டு வரவில்லை .  வீட்டுக்கு வந்த பின்,  போனில் பேசியவர்  பத்திரிகை தீர்ந்து விட்டதாகவும் பத்திரிகை வைக்காததால் வராது இருந்துவிட கூடாது , அது நம் கலாச்சார விழுமியங்களுக்கு நாம் செய்யும் குற்றம் எனவும் அறிவுறுத்தினார் . அதையும் கல்யாணத்திற்கு வருவதையும் ஒப்புக்கொண்டு போவதற்கு மறந்து விட்டேன் ,  ஐயகோ.. இது தீராப்பழி !

சன்னதம்

இன்றைய அலுவலக மீட்டிங்கில் திடீரென மேலாளருக்கு சன்னதம் வந்து விட்டது .  சும்மா சொல்லக்கூடாது முறையான  கோபமும் ஆவேசமும் கலந்துகட்டி தாள லயத்தோடு ஆடினார். குழுவின் அனைத்து ஆண்மக்களையும் மாறுகால் மாறுகை மாறுமூக்கு வாங்கியவர் ,உச்ச கட்ட   பரவசத்தில் எம் குழுவின் ஒரேயொரு பெண்ணை வெறித்து , "இவளன்றோ நமக்குக் கிடைத்த அருமணி, இவள் ஒருத்திதான் வழுவாது ஆற்றும் பணியன்றோ நம்மைக்காத்து நிற்கிறது" என்று கூவிக்கொண்டே போனார். ஹ்ம். அந்த மூஞ்சிக்கு நேத்து தான் எக்ஸ்செல் ஒப்பன் பண்ணவே  சொல்லிக்கொடுத்தேன் .

முகமன்

காடு திறந்தே கிடக்கின்றது , நெட் பேக் சல்லிசாக கிடைக்கின்றது. எழுதிப்பழக வலைப்பூ போல் பிரிதொரு இடம் இல்லை என பேயோன் போன்ற முது கிழவர்கள் நிரூபித்திருப்பதால் வலைப்பூ . உங்களது அன்றாட தலைவலிகளுள் அல்லது காப்பிக்களுள் ஒன்றாக இதையும் எடுத்துக்கொள்ளவும். அதை விடுத்து சீரியஸாக பதில் உரைக்கும் , வாதுக்கு வரும் சான்றோர்களுக்கு இது பூவல்ல .