Skip to main content

Posts

Showing posts from August, 2019

தங்கச் செம்பு

பறை, துடி, மிருதங்கம், தவில், தர்புகா, கடம், டிரம்ஸ் முதலிய தாளக்கருவிகள் இசைத்துறையில் உண்டு. ஈசன் திருஞான சம்பந்தருக்கு தம்பி கையால் தாளமிடாதே என்று பொற்தாளம் வழங்கினாராம்.  லயம் பிதா என்ற பழமொழி இதற்குப் பின்னால் வந்தது. தாள வகைகள் இத்தனை என்று கர்னாடக இசை கற்கையில் சொல்லித்தருகிறார்கள். என் மேலாளர் இதையெல்லாம் அறிந்தவரா எனத்தெரியாது. அயலூர் உயர்மேலாளர் ஸ்ரீ  ஒருவர் அலுவலக கட்செவிக் குழுமத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் அவரது அருந்தவப் புதல்வி கிரித்தவ தேவதைகளுக்கான லட்சணங்கள் பொருந்த உடையணிந்திருந்தார். அவர் பள்ளியில் நடைபெறும் ஆங்கில நாடகத்தில் அவர் ஒரு இறைத்தூதுவராக தோன்றியிருப்பார் போல. குழுவின் நண்பர்கள் அவரவர் அளவில் பாராட்டிக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் தொலைவிலிருந்த நமது மேலாளர் அனைவரையும் பிடித்துத்தள்ளிவிட்டு மூச்சிரைக்க முன்வந்து தனது வாழ்த்துதலை இட்டிருக்கிறார். "இவ்வாறே தொடர்ந்து தூதராகி பிற்காலத்தில் நீங்கள் அமெரிக்காவுக்கான வெளியுறவுத் தூதராக வேண்டுகிறேன்"

வெண்முரசு - மழைப்பாடல்

திரு ஜெயமோகன் எழுதிவரும் நிகழ்காவியமான வெண்முரசு நாவலைப்பற்றி புதுவை வாசகர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமையில் விவாதக்கூட்டங்களை நடத்துகிறார்கள் . வெண்முரசு வரிசையின் இரண்டாம் நூலான மழைப்பாடலை பற்றி கடந்த ஏழு மாதங்களாக விவாதித்து வருகிறோம் .   நண்பர்கள் வெண்முரசு நாவலின் நீண்டநாள் வாசகர்கள் , முரசிமிழும் ஓசையை நன்குணர்ந்து எதிரொலிக்கக்கூடியவர்கள் . வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் உள்ள தொடர்புகளை , புதுச்சொற்களை , அகதரிசனங்களை , மனிதமனத்தின் ஆழ்உணர்வுகளை சிறப்பாக விவாதிக்கக்கூடியவர்கள் . எனவே அவற்றை விடுத்து கடந்த ஜனவரி (2018) மாத கூடுகையில் நண்பர் ஜாஜா விளக்கிய அடிப்படையில் காவியத்தின் பல அடுக்குகளின் சிலவற்றை மட்டும் சற்றே பிரித்துப்பார்க்க முயல்கிறேன் , குறிப்பாக புயலின் தொட்டில் பகுதியின் தனிச்சிறப்புகளை மட்டும் பேசுகிறேன் . இது ஒருவித மாறுபட்ட முயற்சி மட்டுமே . புயலின் தொட்டில் பகுதியில் பாலை நிலம் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது . அரபக பணிகளுக்கு செல்பவர் தவிர்த்து பிற தமிழர் பெ