Skip to main content

Posts

Showing posts from July, 2021

குடைவரையில் ஒரு பாரதக்காரர்-2

வில்லிசைக் கலைஞர், மகாபாரத சொற்பொழிவாளர் - உத்திரமேரூர் "குடவோலை கா முருகன்" நேர்காணல், பாகம் - 2 நான் இப்போ மகாபாரதம் பற்றி சொல்லப்போறேன், நான் பத்தாண்டுகளாக பாரதம் சொல்றேன். பாரதத்துல வில்லிபாரதம் இருக்கு நல்லாப்பிள்ளை பாரதம் இருக்கு. நாங்க சொல்றது வில்லிதான். வில்லிபுத்தூரார் எதையும் சுருக்கமா சொல்லீருவார் இப்படின்னா இப்படி நேரடியா சொல்லுவார். நல்லாப்பிள்ளை அதையே விரிச்சு கற்பனையெல்லாம் சேர்ந்து நீட்டிச்சொல்லுவார், சுருக்கமா சொல்றதான வில்லியோட பாரதம் சுவையில்லாதது இல்லை. முதன் முதல்ல பாரதம் பேச ஆரம்பிச்சது எங்கங்கிறது ஒரு முக்கியமான விஷயமில்லையா, வில்லுப்பாட்டுப் போலவே, பாரதத்தையும் உத்திர மேரூரில் இருக்கும் திரௌபதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போதுதான் மகாபாரதம் சொல்லத் துவங்கினேன். தமிழாசிரியர் ஒருத்தரை கூட வைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினேன். மகாபாரதத்திலேயே சந்தனு கங்கை திருமணம் தான் மிகவும் மிகப்பெரிய விஷயம். அந்தப்பகுதி சொல்லச்சொல்ல இனிக்கும் கேட்கக்கேட்க ரசிக்கும். அப்படி ஒரு பகுதி, மக்கள் யாருமே எழுந்து போகாம இருக்கிற சுவாரஸ்யமான பகுதி. இதை முதலில எடுத்த

வள் விருந்து

நிறுவனத்தில் ஒரு விருந்து, சமைக்கிறாயா என்று கேட்டேன், நமக்கு பழக்கமான தொழிலாளர் தான். தலைவர் பிரசன்டேஷன் தயாரிப்பதில் வல்லுநர். பெரும்பாலும் பல காய்கறிகளை கொட்டித்தான் ஒரு உணவு சமைக்க வரும். அவருக்கு பல்வலி என்று சிறிது நேரத்திற்கு முன்தான் தெரிந்தது, பரவாயில்லை விட்டுவிடு என்றேன். 'இங்கை' என்று சீறினார், நான் உதவட்டுமா என்று கேட்டேன் நிமிர்ந்து என்னை வெறித்துவிட்டு மீண்டும் கீபோர்டுக்குள் குனிந்தார். படையல் வைக்கும் நேரம் பெருங்கிழ மேலாளர் வந்துவிட்டார். நண்பரைப் பார்த்து புன்னகைத்து ரசமா என்றார், நண்பர் தலைகவிழ்ந்தபடியே பெருமூச்சுவிட்டு 'குதுமா' என்றார். மேலாளர் நாக் அவுட்டில் வல்லவர். ரிங்கில் வீழ்ந்து கிடக்கும் நண்பர் பல்லை துப்பிவிட்டு நிமிர்ந்து 'இப்ப சந்தோஷமா' என்றார், மையமாகத் தலையாட்டினேன்.

குடைவரையில் ஒரு பாரதக்காரர் -1

வில்லிசைக் கலைஞர், மகாபாரத சொற்பொழிவாளர் - உத்திரமேரூர் "குடவோலை கா முருகன்" நேர்காணல், பாகம் - 1 சென்ற வாரம் தளவானூர் சென்றிருந்த பொது எதிர்பாராதவிதமாக பாரத சொற்பொழிவாளர் திரு முருகனை கண்டேன். அவருடன் நடத்திய ஒரு சிறிய உரையாடலின் எழுத்துப்பதிவு மகாபாரத சொற்பொழிவு ஆற்றுவதற்கு வந்திருக்கீங்க என்று சொன்னீங்க, உங்களை இங்கு சந்தித்ததில ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பாக, எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி உங்களுடைய பின்னணி பற்றி சொல்லுங்க, எங்க இந்த மகாபாரதத்தை கற்றுக்கொண்டீர்கள் எல்லாருக்கும் முதலில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த இடத்தில பேட்டி எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி . முதன் முதல்ல, நான் இப்போ காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிராத்தில இருந்து வரேன். உத்திரமேரூர் டவுன் தான், சிறப்புப் பேரூராட்சி அப்டின்னு சொல்லுவாங்க, தேர்வு நிலை பேரூராட்சி எங்க ஊரு, அதுலேருந்து வந்திட்டிருக்கேன். நான் வந்து மகாபாரதம் கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளாக சொல்லிக்கிட்டிருக்கேன். என்னுடைய குருநாதன் திருவண்ணாமலை பக்கத்தில இருக்கக்கூடிய மாதலம்பாடி என்னும் கிராமத்திலிருக்கிற கண்ணன் பாரதியா

பலி வாங்குதல்

விற்பனை மேலாளர் ஒருவர் திடீரென எனது அலுவல் மேசைக்கருகே வந்தார், கீழுதட்டை கடித்துக்கொண்டு அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். யாரிடம் வாங்குப்பட்டார் என்று தெரியவில்லை, மீட்டளிக்க பலிமிருகம் துழாவுகின்றார். என் கணிப்பொறி திரையை உற்றுப் பார்த்தார், சென்றும் விட்டார். வெளியே உயரதிகாரி அம்மணியிடம் அவர் கத்திக் கொண்டிருக்கும் சத்தம். திரையிலிருந்த என் குலதெய்வம் காளி யாரையோ மிதித்து நின்றிருந்தாள்.

திருத்தம்

நேற்று அலுவலக கூட்டம் ஒன்று நடந்தது, நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். ஆமாம், நேர்முக கூட்டம் இல்லை இணையக்கூட்டம் தான். மேலாளாளர் ஸ்ரீ பேச ஆரம்பித்தார். இது அவருடைய கோப்பை தேநீர் இல்லை என்று அறிந்தும்கூட பருக ஆரம்பித்தார். உண்மைத் தலைவர் வேறு எங்கோ கோப்பை தேடியிருக்கலாம். தேவகுமாரனை நினைத்துக்கொண்டு சாட்டையை ஒரு சுழற்று சுழற்றினார் மே.ஸ்ரீ . உடனே நம்பியார் கையிலிருந்ததை எம்.ஜி.யார் பறித்ததுபோல பாய்ந்து வந்தார் பெருங்கிழ மேலாளர். கோப்பையை கவ்வ ஆரம்பித்த மே.ஸ்ரீயை அப்படியே பற்றிப்பிழிந்து தூரப்போட்டார். உக்கிரம் அடங்காமல் உரையாடினார் பெ.கி.மே , என்னைத்தவிர யாராவது இங்கு பணிபுரிவதுண்டா என்று உறுமினார். மே.ஸ்ரீ முனகலாக 'சாரே கொல மாஸூ' என்றார். புன்னகைத்து 'என்னையும் மே.ஸ்ரீ யும் தவிர' என்று திருத்தினார் பெ.கி.மே.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா