Skip to main content

Posts

Showing posts from February, 2021

ஆற்றுப்படை -2

அபிராமம் என்ற சொல்லுக்கு அழகு என்று பெயர், அபிராமவல்லி என்றால் அழகுக்கொடி. சிவபெருமானை அழகன்  என்றும் சொக்கன் என்றும் அழைக்கும் தலங்கள் சிலவே உண்டு. இக்கோவில் புராணத்தில் மூன்று கதைகள் உள்ளன. முதலில் ஊர் மற்றும் இறைவனின் பெயர்க்காரணம் சொல்லும் கதை இது.ஆதியில் ஆ ( மாடுகள்) குலத்திற்கு கொம்புகள் இல்லாமையால் அவை பிற விலங்குகளால் துன்புற்றன, அவை இத்தல இறைவனை வேண்டி கொம்புகள் பெற்றதால், இத்தலம் ஆ குலத்திற்கு தாய்வீடு எனப் பொருள்கொள்ளும் படி, ஆ மாத்தூர் - கோ மாத்ரு புரம் என்றானது. புராணப்படுத்துதலில்  காமதேனுவும், நந்தினியும் , நந்தியும் கூட இங்கு வழிபட்டதென கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக மூல லிங்கத்தில் பசுவின் குளம்பு பட்ட வடுவுள்ளதாகச் சொல்வர். என்னளவில், இந்த புராண ஏற்றங்களுக்கு அடித்தளத்தில் எதோ ஒரு நாட்டார் கதை ஒளிந்திருக்கக்கூடும் என்று தோன்றும், எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருசில சான்றுகள் எஞ்சியிருக்கக்கூடும். கண்ணை மூடி இதை ஒரு நாடோடிக்கதையாக உருவகித்துக்கொள்ளுங்கள், அங்கு மதமோ, சிவனோ இல்லை. பசுக்கள் மேய்ச்சலில் இருக்கின்றன, ஒரு வன்மிருகம் அவற்றை கொன்று வருகிறது, அஞ்சிய

ஆற்றுப்படை -1

நாங்கள் கிளம்பியது ஒரு மழை ஞாயிறு , புதுச்சேரியில் உள்ள மணிமாறன் வழியில் எங்களை கூப்பிட்டுக்கொள்வதாகத் திட்டம் . மணிமாறன் அந்த வானிலையை எதிர்பார்க்க வில்லை , எனவே திட்டத்தில் ஒரு மணிக்கூர் தாமதமாகியது . நான் வில்லியனூரிலும் திருமா மதகடிப்பட்டிலும் இணைந்து கொள்ள , முதலில் திருவாமாத்தூரை நோக்கி பயணித்தோம் . புதிய வருடக் கொண்டாட்டமாக இந்த   சிறு பயணம் , நான் நண்பர் மணிமாறன் , சகோதரர் திருமாவளவன் மூவரைத்தாண்டி நான்காவதாக ஒருவரை இணைத்துக்கொள்ள முயன்றோம் , ஆனால் இப்படியாகத்தான் அமைந்தது . மணிமாறனின் காரில் ஒரு பகலில் சென்று மீளக்கூடியவையாக நான்கு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டோம் .   எனது முந்தைய பயணங்கள் யாவும் நான் தனியாக செல்பவை , நண்பர்களுடன் பயணிப்பது அரிது , அந்த வகையில் இது எனக்கு ஓர் இனிய துவக்கம் . அகழ்வாய்வுத்துறை   தயவில் ஹைவே சாலையிலேயே முன்னும் பின்னும் அலைந்து திருவாமாத்தூர் பிரிவுக்குள் சென்றோம் . தேநீருக்காக வண்டியை நிறுத்திய இடத்திற்கு அருகிலேயே ஒரு ரோட்டின் இறுதியில் அய்யனார் கோவில் ஒன்று த