Skip to main content

Posts

Showing posts from May, 2015

உச்சஸ்தாயி

இன்றைக்கு அலுவலக உயர்திரு அழைத்தார். அவரிடம் தாள்களை நீட்டினேன்.தினமும் கொட்டப்படும் குப்பை பற்றிய தரவுகள்.  எட்டு, ஒன்பது தேதிகளின் தாள்களை பார்த்துக்கொண்டே வந்தவர்- அடுத்து ஒன்றும் இல்லாமல் அதிர்ந்து போனார். என்னைப்பார்த்து ' பத்து எங்க..அஅஅஅஅ'.. என்றார் . மௌனம்  'பத்தாந்தேதி பேப்பர் எங்கப்பா...' கனத்த   மௌனம் ' உன்னத்தான் கேக்குறேன் மரம் மாதிரி நிக்குறியே  எங்க...  ' உச்சஸ்தாயி....கண்ணாடி  சாளரம்  அதிர்கிறது.. என்ன செய்வது.. அன்றைக்கு தேதி ஒன்பதுதான் ஆகியிருந்தது!.   

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிருக்கிறார்.    .