நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் .
நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,
'ஒண்ணும் இல்லை '
'கொஞ்சம் நல்லா ....'
'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல '
ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள்.
நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் .
அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,
" என்ன, காலம் தாழ்த்தி நான் கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "
உக்கும் ,
மனிதர் பொய் சொல்லியிருக்கிறார்.
.
Comments
Post a Comment