Skip to main content

உச்சஸ்தாயி


இன்றைக்கு அலுவலக உயர்திரு அழைத்தார்.

அவரிடம் தாள்களை நீட்டினேன்.தினமும் கொட்டப்படும் குப்பை பற்றிய தரவுகள்.

 எட்டு, ஒன்பது தேதிகளின் தாள்களை பார்த்துக்கொண்டே வந்தவர்- அடுத்து ஒன்றும் இல்லாமல் அதிர்ந்து போனார். என்னைப்பார்த்து

' பத்து எங்க..அஅஅஅஅ'.. என்றார் .

மௌனம்

 'பத்தாந்தேதி பேப்பர் எங்கப்பா...'

கனத்த   மௌனம்

' உன்னத்தான் கேக்குறேன் மரம் மாதிரி நிக்குறியே  எங்க...  '

உச்சஸ்தாயி....கண்ணாடி  சாளரம்  அதிர்கிறது..

என்ன செய்வது.. அன்றைக்கு தேதி ஒன்பதுதான் ஆகியிருந்தது!.   


Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

யானைக் காதல்

களிறு, கைமா, வேழம் , எனப் பலசொற்கள் உண்டு தமிழில் யானையைக் குறிக்க , அவ்வகையில் கடலையும் யானையையும் மட்டும் தமிழ்மொழி அதிகம் நேசித்த காரணம் பரம ரகசியமாகவே இருக்கிறது . நானும் ஒரு யானையைப் பார்க்க மதுரை வரை சென்றிருந்தேன் . ஆலவாயின் வடக்கே , காலத்தை தன் காலடியில் இட்டு அதன்மேல் அசையாது படுத்திருக்கிறது ஒரு கல்யானை , நால்வாய் மேலே நீள்துதிக்கை கிடத்தி தூங்காநகரைக் கண்கொட்டாமல் பார்க்கும் அதற்கு , ஈராயிரம் ஆண்டுகளாகவும் யானைமலை என்றே பெயர் .   பசுமைநடை அமைப்பின் நூற்றியோராவது நடை அங்குதான் நிச்சயிக்கப்பட்டிருந்தது . நிகழ்வை அறிந்து அதில் பங்கேற்பது உறுதியானதும் ,   முதல்முறை நிஜ யானையின் மீது ஏற்றிவிடப்பட்டபோது குத்திய அதன் கனத்த முடிகளையும் , அதற்காக அழுததையும் நினைத்துக்கொண்டேன் . யானைமலையில் வரலாற்றுச் சான்றாக   மூன்று இடங்கள் உள்ளன , காலத்தால் முந்திய, மலையின் மேல் பகுதியில்   உள்ள தமிழிக்கல்வெட்டு உடன் சமணப்படுக்கைகள் . அடுத்து மலையின் பக்கவாட்டில், தீர்த்தங்கரர்கள் உருவங்கள் செதுக்கப்...