Skip to main content

Posts

Showing posts from October, 2019

நற்றிணை பாடல் 2

அழுந்துபட   வீழ்ந்த   பெருந்   தண்   குன்றத்து , ஒலி   வல்   ஈந்தின்   உலவைஅம்   காட்டு , ஆறு   செல்   மாக்கள்   சென்னி   எறிந்த செம்   மறுத்   தலைய ,  நெய்த்தோர்   வாய , வல்லியப்   பெருந்   தலைக்   குருளை ,  மாலை ,                                5 மால்   நோக்கு,   இண்டு   இவர்   ஈங்கைய   சுரனே ; வை   எயிற்று   ஐயள்   மடந்தைமுன்   உற்று எல்லிடை   நீங்கும்   இளையோன்   உள்ளம் , காலொடு   பட்ட   மாரி மால்   வரை   மிளிர்க்கும்   உருமினும்   கொடிதே    10 உடன்   போகாநின்றாரை   இடைச்   சுரத்துக்   கண்டார்   சொல்லியது .- பெரும்பதுமனார் இப்பாடல் பாலைத்திணையில் வருகிறது, காதலர்கள் காட்டு வழி உடன்...

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி...