Skip to main content

சிறுபாணன் செலவு

நாஞ்சில் நாடனின் பேசுகையில் சிறுபாணாற்றுப்படை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். ஓங்கு நிலை ஒட்டகம் பற்றியும் பீமனது சமையல் நூல் பற்றிய குறிப்பையும் சொன்னார். அவர் சொல்லச்சொல்ல  அப்படி என்னதான் உள்ளது என்று உட்சென்று பார்த்தேன்.

தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கான ஒரு பாடமாக சிறுபாணாற்றுப்படை இருந்தது. எளிய துவக்கத்திற்கு அது உதவியது. பின்னர் ஆழ்ந்து படிக்கையில் தமிழ்ச்சுரங்கம் தளத்தில் நல்ல உரையுடன் படிக்கக்கிடைத்தது.  இறுதியாக கண்டடைந்த தமிழ்த்துளி தளத்தில் செங்கை பொதுவன் என்ற அறிஞர் கொடுத்துள்ள விளக்கம் மிகச்சிறப்பாகவும் பொருத்தமாகவும் உள்ளது.

ஆற்றுப்படுத்தும் பாணன் துவக்கத்தில் மூவேந்தர்களை விட ஏழு வள்ளல்களை விட சிறந்த வள்ளலான நல்லியக்கோடனை புகழ்கிறான். அவனை சந்திக்கும்முன் தன் நிலையை, சந்தித்தபின் தனது மாற்றத்தை சொல்கிறான்.  அவனது ஊரான தென்மாவிலங்கை செல்லும் வழியான எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய
ர்களின் கண் செல்கையில் நிலவளம் எப்படி இருக்கும் எனவும் அவ்வூர் மக்கள் எப்படி உபசரிப்பர் எனவும் கூறி ஆற்றுப்படுத்துகிறார்.

எயிற்பட்டினம் இன்றைய மரக்காணமாக இருக்கலாம். நீர்வளமிக்க ஆமூர் பற்றி தெரியவில்லை ஆனால் சமணத்தலமான மேல் சித்தாமூர் பற்றி அறிகிறோம். ஓய்மா நாடு இன்றைய திண்டிவனத்திலுள்ள கிடங்கில் என கருதப்படுகிறது கிடங்கிற்கோமான் நல்லியன். மாவிலங்கை, மேல்மாவிலங்கை, கீழ்மாவிலங்கை எனும் ஊர்கள் உள. கீழ்மாவிலங்கையில் பல்லவர் கால பாறையில் குடைந்து பொளியப்பட்டவிஷ்ணு சிலை ஒன்றும் உள்ளது. வறண்ட பாலை போலாகிய, தன் கை வேலால் நல்லியக்கோடன் கைக்கொண்ட, கிணறு வெட்டித்தந்த வேலூர் பற்றி அறிகிலோம்.






Comments

Popular posts from this blog

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...