நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.
வில்லிசைக் கலைஞர், மகாபாரத சொற்பொழிவாளர் - உத்திரமேரூர் "குடவோலை கா முருகன்" நேர்காணல், பாகம் - 2 நான் இப்போ மகாபாரதம் பற்றி சொல்லப்போறேன், நான் பத்தாண்டுகளாக பாரதம் சொல்றேன். பாரதத்துல வில்லிபாரதம் இருக்கு நல்லாப்பிள்ளை பாரதம் இருக்கு. நாங்க சொல்றது வில்லிதான். வில்லிபுத்தூரார் எதையும் சுருக்கமா சொல்லீருவார் இப்படின்னா இப்படி நேரடியா சொல்லுவார். நல்லாப்பிள்ளை அதையே விரிச்சு கற்பனையெல்லாம் சேர்ந்து நீட்டிச்சொல்லுவார், சுருக்கமா சொல்றதான வில்லியோட பாரதம் சுவையில்லாதது இல்லை. முதன் முதல்ல பாரதம் பேச ஆரம்பிச்சது எங்கங்கிறது ஒரு முக்கியமான விஷயமில்லையா, வில்லுப்பாட்டுப் போலவே, பாரதத்தையும் உத்திர மேரூரில் இருக்கும் திரௌபதை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போதுதான் மகாபாரதம் சொல்லத் துவங்கினேன். தமிழாசிரியர் ஒருத்தரை கூட வைத்துக்கொண்டு சொல்லத்துவங்கினேன். மகாபாரதத்திலேயே சந்தனு கங்கை திருமணம் தான் மிகவும் மிகப்பெரிய விஷயம். அந்தப்பகுதி சொல்லச்சொல்ல இனிக்கும் கேட்கக்கேட்க ரசிக்கும். அப்படி ஒரு பகுதி, மக்கள் யாருமே எழுந்து போகாம இருக்கிற சுவாரஸ்யமான பகுதி. இதை முதலில எடுத்த