Skip to main content

குடைவரையில் ஒரு பாரதக்காரர் -1

வில்லிசைக் கலைஞர், மகாபாரத சொற்பொழிவாளர் - உத்திரமேரூர் "குடவோலை கா முருகன்" நேர்காணல், பாகம் - 1
சென்ற வாரம் தளவானூர் சென்றிருந்த பொது எதிர்பாராதவிதமாக பாரத சொற்பொழிவாளர் திரு முருகனை கண்டேன். அவருடன் நடத்திய ஒரு சிறிய உரையாடலின் எழுத்துப்பதிவு



மகாபாரத சொற்பொழிவு ஆற்றுவதற்கு வந்திருக்கீங்க என்று சொன்னீங்க, உங்களை இங்கு சந்தித்ததில ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பாக, எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி உங்களுடைய பின்னணி பற்றி சொல்லுங்க, எங்க இந்த மகாபாரதத்தை கற்றுக்கொண்டீர்கள் எல்லாருக்கும் முதலில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த இடத்தில பேட்டி எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி .

முதன் முதல்ல, நான் இப்போ காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிராத்தில இருந்து வரேன். உத்திரமேரூர் டவுன் தான், சிறப்புப் பேரூராட்சி அப்டின்னு சொல்லுவாங்க, தேர்வு நிலை பேரூராட்சி எங்க ஊரு, அதுலேருந்து வந்திட்டிருக்கேன். நான் வந்து மகாபாரதம் கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளாக சொல்லிக்கிட்டிருக்கேன். என்னுடைய குருநாதன் திருவண்ணாமலை பக்கத்தில இருக்கக்கூடிய மாதலம்பாடி என்னும் கிராமத்திலிருக்கிற கண்ணன் பாரதியார் அப்பிடீன்னு சொல்லிட்டு, என்னுடைய குருநாதர் அவரு ரொம்ப எளிமையானவர். சிறப்பானவர், சீர்தூக்கி எல்லாக்கருத்துக்களையும் சொல்லக்கூடிய நல்ல ஒரு மகான். ஒரு நண்பர் மூலமாக கோவிலில் தான் அறிமுகமானார், அவரு கொடுத்ததை விரிவாக்கம் பண்ணி நான் ஒரு பத்து ஆண்டுகளாக சிறப்பாக இறைவன் அருளாலே நடத்திக்கொண்டு வருகிறேன். இந்த ஆண்டு வந்திருப்பது செஞ்சி அருகிலுள்ள தென்புதுப்பட்டு என்ற கிராமத்துல கடந்த பதினோரு நாட்களாக சொற்பொழிவு செய்திக்கிட்டிருக்கோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்துல நான் ஒரு வில்லிசைக் கலைஞர், நான் மகாபாரதத்திற்கு வருவதற்கு முன்னாடி வில்லிசைக் கலைஞர். வில்லிருக்கும் பாவனையில் கையசைவுகளோடு பாடுகிறார் " தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமாம் வில்லினில் பாட வந்தருள்வாய் கணபதியே, தானதந்தத்தோடு ஏழு சத்தங்களும் பாட்டுப்பாட" - இது வில்லுப்பாட்டில் முதல் பாடல். சிறுவயதிலிருந்தே எனக்கு இசை ஆர்வம், கையிலே சின்ன ஒரு தட்டு கிடைச்சாலும் தாளம் போடுவேன். இப்போவே கையிலே ஒரு கருவி கிடைச்சாலும் வாசித்து பாட்டுப்பாடி விடுவேன். அப்படி வளந்ததுதான் இது, மிகப்பெரிய விஷயம் என்னான்னா மகாபாரதம் மூலமாக, சொற்பொழிவு மூலமாக சொல்வது என்னான்னா, இசையை முதலில் நேசியுங்க. இசையை நேசிப்பதற்கான மனம், அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். சின்னக்குழந்தைகளுக்கு கூட இசையை வழிபாடாக - தேவாரம், திருவாசகம், திருப்புகழ் இப்படி ஒவ்வொன்றாக அவர்களுக்கு சொல்லிகுடுக்கறது மூலமாக அவுங்க மனம் லயப்படும், அவுங்க அறிவு அதிகமா வளரும், எந்த அணுகுமுறையையும் எளிதா புரிஞ்சுப்பாங்க, பக்தி வரும் பரவசம் வரும், நீண்ட காலம் வாழ்வதற்கான ஆரோக்கியமும் கிடைக்கும். அதில எந்த வித மாற்றமும் இல்லை.

வில்லுப்பாட்டு பொதுவாக தென்தமிழகத்தின் கலை, நீங்க எப்படி காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு வில்லிசை கற்றீர்கள்?

வில்லுப்பாட்டு கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பேன். அது மட்டுமில்லாமல் சிறப்பு நிகழ்ச்சிகளான பட்டிமன்றம் வழக்காடுமன்றம் முதலியவற்றை பார்க்கும்போது நாமும் ஏன் இந்த மாதிரியெல்லாம் பண்ணக்கூடாது அப்பிடீங்கிற ஆர்வத்துலதான் வில்லுப்பாட்டு பாட ஆரம்பிச்சேன். முதன்முதலா விநாயகப்பெருமான் முன்னாடி வில்லுக்கட்டி ஒரு பாடலோடு ஆரம்பித்தேன். உத்திரமேரூரில் வடவாயிற் துர்க்கையம்மன் அப்பிடீன்னு புகழ்பெற்ற கடவுள். முந்தி திருவிழா நடக்கும்போது பெரிய எருமை ஒன்னு அப்படியே வெட்டி காவு கொடுத்து, ஒரு பெரிய பள்ளத்துல போட்டு மூடிடுவாங்க. மருவருடம் அதை திறந்து பாக்கும்போது அது விபூதியாக்காட்சி தரும். அப்பிடிப்பட்ட சக்தி வாய்ந்த அம்மா. அந்தக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது, அப்போ எந்த கலை நிகழ்ச்சியும் நடத்தப்படலை. அங்கு வில்லுப்பாட்டு நடத்தியே ஆகணும்னு எனக்கு ஆர்வம்.

அப்போ என்கூட துணைக்கு யாருமே வரலை, என்னிடம் இசைக்கருவிகள் எப்போதுமே இருக்கும். என்னுடைய ஆர்வம் என்னான்னா எல்லா இசைக்கருவிகளை நம்மிடம் சொந்தமாக இருக்கணும் நாம யாரிடமும் கேட்கக்கூடாதுன்னு மனப்பான்மை சின்ன வயசிலருந்தே எனக்கு இருக்கு .மிருதங்கம் , ஆர்மோனியம், தபேலா, கீபோர்டு எல்லாமே இருக்கும், அதை எடுத்துக்கிட்டு சைக்கிள்ல வச்சுக்கிட்டு நான் மட்டுமே போனேன். போயிட்டு வில்லக்கட்டினேன், மிருதங்கத்தை எடுத்துக்கிட்டேன், மிருதங்கம் தானாகவே வாசிப்பேன். பக்கத்துல ஆமாம் போடவே ஆளில்லையே என்று யோசனை பண்ணினேன். எதிரே பசங்க விளையாடிட்டு இருந்தாங்க பாக்கெட்டில் இரு 20 சாக்கலேட்டு வாங்கிட்டு போயிட்டு வாங்கடா பசங்களா இங்க என் பக்கத்துல உக்காருங்க, எனக்கு எப்ப வேணுமோ அப்பா சின்னதா கிள்ளுவேன் அப்பா உடனே ஆமாம் போட்டுருங்க அப்பிடீன்னு ஏற்பாடு பண்ணினேன், அதுல சாக்லேட் கம்மியா கொடுத்தேன்னு நடுவுல ரெண்டு பேர் எழுந்தே போயிட்டாங்க. அதுல ரெண்டு பேர் மட்டுமே எனக்காக நின்னாங்க அன்னிக்கு மகிஷாசுர மர்த்தினி அப்பிடீங்கிற தலைப்புல பாடினேன், நிகழ்ச்சிக்கு பலே பலே ஆயிடுச்சு. அதன் பிறகு எந்த தலைப்பு கொடுத்தாலும் ஒரு கண்ணாடியக் குடுத்தாலும் பாறையக் கொடுத்தாலும் நானே பாடல் எழுதி அழகா வடிவமா கோர்த்து வில்லுப்பாட்டு சிறப்பா பாடிடுவேன். இதுதான் என்னுடைய சிறப்பு. எனது தாய் தந்தையை முதல் குருவா சொல்லுவேன், குருநாதருக்கு மேலாக நான் சொல்லுவது உத்திரமேரூர் குடவோலை முருகப்பெருமானைத்தான் சொல்லுவேன் உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுயம்பு வடிவத்துல இருக்கார் அஞ்சரை அடி உயரத்துல இருக்கார் அதுவும் ஜடாமுடிக்கோலத்துல இருக்காரு. எல்லாக் கோவில்லயும் சுவாமியைப்பார்த்திங்கன்னா அபயம்னு சொல்லி கையை காண்பிப்பார், ஆனால் இங்கு அபய ஹஸ்தத்திற்கு பதிலாக கையை சாய்வாக வைத்திருப்பார. உத்திரமேரூரில் இருக்கும் முருகப்பெருமான் அருணகிரிநாதரால் நான்கு திருப்புகழ் பாடப்பட்டவர்.

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு வடிவான - என்றொரு பாடல்
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி - என்றொரு பாடல் .

அவரு அபய ஹஸ்தத்திற்கு பதிலாக கையை இப்படி சாய்வாக வைத்திருப்பாரு, கருவறைக்கு நாம போகும்போது கிழக்கு நோக்கி இருப்பாரு. அவரை நாம தரிசிக்க போகும்போது சுவாமி இப்படித்தான் கையை காட்டுவார், அவரு ஏன் இப்படி கையை வைத்திருக்கார்னு யாருக்குமே தெரியாம சாமி கும்பிட்டுட்டு வந்துருவாங்க. அதனோட உட்பொருள் என்னான்னு கேட்டிங்கன்னா, அவர் நான் தவக்கோலத்திலிருக்கிறேன் இதோ என் அம்மையப்பனை வைத்து தவம் செய்கிறேன் நீங்கள் அவர்களை கும்பிடுங்கள் என்று சொல்வதாக பொருள். பக்கத்திலேயே பெருமாள் கோவில் இருக்கிறது உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் ஆலயம். அங்கு பெருமாள் நின்ற நிலை அமர்ந்த நிலை கிடந்த நிலை என்று மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். ஜெயம் கொண்டான் சோழர் காலத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் கட்டப்பட்டது. எனது ஊரிலுள்ள கோவில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

பொதுவாகவே நான் வழக்கமான சொற்பொழிவை விட நல்ல கருத்துக்களை எளிமையாக பாமர மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது சொற்பொழிவை கேட்பதற்கு முதலில் நான் தான் ரசிப்பேன். ஒரு மேடை நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு நடத்தினால் முதலில் அதை நான்தான் ரசிப்பேன். அதற்கு அப்புறம்தான் எல்லாரும் ரசிக்கணும்னு நினைப்பேன். எனக்கு பிடித்திருந்தால் அது மற்றவர்களுக்கும் சுவையாக இருக்கும் என்று நினைப்பேன்.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி
24.07.2021

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி