Skip to main content

பி பி திரும்பி பார்த்தல் 2.0 - 2015

                                                    பி பி திரும்பி பார்த்தல் 2.0  - 2015

26. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின, எதிர்க்கட்சிகள் உண்மை நிலவரம் கேட்க, கலாம் நினைவஞ்சலிக்கு உடல்நலமின்மையால் வர முடியவில்லை என முதல்வரே சொல்ல நேர்ந்தது .

27. ஸ்டியரிங்கை பிடித்த கையோடு கேமெராவை தூக்கினார் அஜித். அப்புக்குட்டி , ஸ்ருதி என க்ளிக்கித்தள்ளினார்.

28. விவசாயிகள் தற்கொலைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தியது  .
   
29. தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்         மரணமடைய , அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதித்தது அரசு.

30.  பருப்பு விலை ஜெட் ஏறியது, துவரம்பருப்பை துயரம் பருப்பு என பேர்மாற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன . காய்கறி விலையும்   உயர , சிக்கன் சாப்பிட்டு காலமோட்டினான் தமிழன்.

31. படேல் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டுக்கு போராட, காந்தி பூமியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டி கடைசியில் பலான வீடியோவில் மாட்டி காமெடி பீஸானார்  ஹர்த்திக் படேல்.

32. தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அதிகம் இருப்பதாக லாரிகளை மறித்து கட்டை கட்டியது கேரள அரசு, தமிழக அமைச்சர் ஆய்வு, அறிக்கை என , வாங்க.... பேசுவோம்...... ஸ்டைலில் பதிலளிக்க, அவர்களே டயர்டாகி கட்டையை கழற்றினார்கள் .

33. தமிழ்நாட்டில் முதல்வர் சீட்டுக்கு பல பேர் கர்ச்சீப் போட, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓட்டினார் அன்புமணி. வரிசையாக 4 போஸ்டர் ஒட்டியவுடன் சைக்கிள் பஞ்சரானது , போஸ்டரும் நின்று போனது.

34. உலக முதலீட்டாளர்கள் மாநாடு  இந்த ஆண்டு உலகத்தர காமெடி.
     இவ்வளவு முதலீடு வரும் என தமிழக அமைச்சர்கள் கணக்கை அடிச்சு உட  ,  உலகமெல்லாஞ்சுத்தியும்  இம்புட்டு நம்மாளயே  முடியலயே என முழி பிதுங்கினர்  மோடி பாய்ஸ்.

35. பிரித்திகா யாஷினி , குணவதி என திருநங்கைகள்  அரசு பணிகளில் அமர,
     அவர்கள் மீதான பார்வையில் மரியாதை அதிகரித்தது.

36. சாதியக்கொலையில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் பலியாக அதை விசாரித்த காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் .

37. இந்தியாவிலேயே வாட்ஸ் ஆப்பில் தேதி குறித்து சரண்டரான பெருமைக்கு சொந்தக்காரரானார் யுவராஜ். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து யார்டு என்று ஒரு காலத்தில்,' சும்மா பேசிக்கிட்டாங்க மாமா' ....

38. உள்ளாட்சி தேர்தல்களையெல்லாம்  ச்சும்மா லெப்ட்டில் அடித்தது நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி வெல்ல, சொம்பை தூக்கி உள்ள வைத்தார் நாட்டாமை.

39. டாஸ்மார்க்கை மூடச்சொல்லி பாடிய பாடகர் கோவனை நள்ளிரவில் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ்.

40. உள்நாட்டு போர்களாலும் , ஐ எஸ்  தீவிரவாதத்தாலும் உலகெங்கும் சிரியா அகதிகள் தஞ்சமடைந்தனர்.

41. வருடம்  முழுக்க வாயால் சர்ச்சை களி கிண்டினார்  இ வி கே எஸ் இளங்கோவன் . அம்மாவை வம்புக்கு இழுக்க , கொடும்பாவி செய்பவர்களது டிமாண்ட் எகிறியது . நிற்காது நக்மா , தமிழிசை என வம்பிழுத்தவர் விஜயதாரணியிடம் வருஷக்கடைசியில் ஒரண்டை  இழுத்தார் .

42. இலங்கையில்  போர்க்குற்ற சர்வதேச விசாரணை தேவையில்லை என அந்தர் பல்டி அடித்தது அமேரிக்கா .

43.சவுதியில் வேலை செய்யப்போய் கையை இழந்து வந்தார் தமிழ்நாட்டின் கஸ்தூரி. மனிதர்கள் மீது மனிதர்கள் இவ்வளவு வெறுப்புணர்ச்சி கொள்ளமுடியுமா என்ன ? சவுதியில்  பிறக்க வேணும் பத்து பெரியார்...

44. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்தவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டியது மழை.

45. "இது ச்சும்மா டிரைலர் தாம்மா" என பின்னால் வந்தது பெருமழை, சென்னை கண்ணீர்த் தீவாகியது. கடலூர் மீண்டும் மீண்டும் சிதைந்தது.

46.  செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறக்காதது தான் வெள்ளத்துக்கு காரணம் என எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பின. இன்று வரை அரசிடமிருந்தது முறையான பதில் இல்லை.

47. வருடம் முழுக்க வாட்ஸ் ஆப்பில் லஞ்ச , கிளுகிளுப்பு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டிருந்தான் தமிழன். இன்னைக்கு என்ன ஆடியோ ரிலீஸ் ஆகப்போகுதோ என எதிர்பார்த்திருக்க, தமிழக முதல்வரே மக்களிடம் தழுதழுத்தார்.

48.  சக மனிதனுக்கு மனிதன்  உதவிய  நேரத்திலும் யார் யாரோ கொடுத்த நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டி விசுவாசம் காட்டினர் ஆளுங்கட்சியினர். எங்க தான் ஓட்டுவது என்ற விவஸ்தை இல்லாமல் சிலர் நிவாரணத்துக்கு வந்த "ஆடை"களிலும் ஒட்டி வைக்க, கொத்தாக அள்ளியது போலீஸ் .

49. வருஷக்கடைசியில் பீப் பாடல் வெளிவந்தது, நேரடியாக சிங்கிள் மீனிங்கில் பீப் போட்டதற்கு இளவட்டங்களே  திட்டத்துவங்கினார் . தலைமறைவானார்கள் சிம்புவும் அநிருத்தும் .

50. பத்திரிக்கையாளர்களை திட்டியதோடு காரியும் துப்பினார் விஜயகாந்தூ.
     ஆச்சரியமாக, ஊடக நடுநிலைமையை கெட்ட கேள்வி கேட்டு , கேப்டனை ஆதரித்தனர் நெட்டிசன்ஸ்.





Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி