Skip to main content
பிடரிக்கு பின்னால் திரும்பி பார்த்தல்  - 2015


கடந்த வருடத்தை (2015)  நாளை முதல் பத்திரிக்கைகள் கிழித்து தோரணம் கட்டப்போகிறார்கள் .

தொலைக்காட்சியிலும்  நெட்டிலும் ஏற்கனவே  கிழிக்க ஆரம்பித்து விட்டார்கள், நாமும் கொஞ்சமாவது திரும்பிப் பார்ப்போம்.


டாப் 50 விஷயங்கள் - 2015 

1. மேகே தாட்டுவில் அணை கட்டுவதாக கர்நாடகா வரிந்து கட்டியது.
 ஆரம்பத்தில் சவுண்டு விட்ட தமிழக அரசு தற்போது மௌனம் காக்கிறது.

2. அரசு அதிகாரி முத்துக்குமார சாமி  தற்கொலை வழக்கில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தூக்கியடித்தார்கள் . இன்னும் யாருக்கும் நியாயம் கிடைத்த பாடில்லை .

3. தமிழகத்தில் கடன் சுமை மிகவும் அதிகமானதாக அறிக்கைகள் பறந்தன.

4.இந்த ஆண்டும் அதிகாரி சகாயம் தான் மக்களின் ஹீரோ , வில்லன் வேறு யார் ,தமிழக அரசு தான். அரசு இயந்திரம் படுத்திய பாட்டில் மனிதர் இரவில் குவாரியில் உறங்கி கிரானைட் வழக்கின்  தடயங்களை காப்பாற்றினார்.

5. காணாமல் போனவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியின் பெயரை ஆளாளுக்கு வாசித்தார்கள், வருடம் முழுதும் அரசியல் செய்த களைப்பை !!? போக்கிக்கொள்ள மறுபடியும் புத்தாண்டு கொண்டாட கம்பி நீட்டி விட்டார் தீராத விளையாட்டு பிள்ளை .

6. இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் அரசாங்கத்தால் மிக மோசமாக அணுகப்பட்டார்கள். ரோட்டில் போராட்டங்களை நடத்தியவர்களை போலீஸ் "நட்போடு" அப்புறப்படுத்தியது.

7. தமிழகத்தில் மக்களின் முதல்வர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டது .

8. செம்மரக்கட்டைகள் கடத்தியதாக ஆந்திராவில் 20 தமிழக கூலிகள் மர்மமான முறையில் ஆந்திர வனத்திறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போதைக்கு மக்களும் மனித உரிமை ஆர்னலர்களும் கொந்தளித்தனர்.
இன்னும் கூலிகள் செல்வதும் , கைது செய்யும் படலமும் தொடர்கிறது.

9.  மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்த கையோடு , வெளிநாட்டில் டிரஸ்சுக்கு அளவு கொடுத்து விட்டு வந்தார்.

10 மோடி அரசு ஒரு ஆண்டை கடந்தது. பிறந்தநாள் விழா கேக் வெட்டிய கையோடு   ஆளாளுக்கு ஊழல் புகார் வாசித்தார்கள். பத்தாததற்கு கட்சிக்குள் புகார் பத்திரங்கள் படிக்கப்பட்டன.

11. தமிழக அமைச்சர்கள் கண்ணீர் , தாடி சகிதம் "தமிழக நலனுக்காக" ஊரில் உள்ள அனைத்து வேண்டுதல்கள், யாகங்கள் எல்லவற்றையும் பட்டியலிட்டு செவ்வனே நடத்தினர் , இதனால் கோவிலில் பணப்புழக்கம் அதிகமானதாக சர்வே ஒன்று சொல்கிறது .

12.  சல்மான் கான் சகல வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் .  அவருக்கு சிறந்த குடிமகன் விருதும் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

13. மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்று ஒரு குரூப் கிளம்பியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாக கலவரம் நிகழ்ந்தது .

14. திப்பு சுல்தானுக்கு விழா எடுத்த கர்நாடகாவுக்கு எதிராக காவி கட்சியினர் கொடிபிடித்தனர்.

15. சுஷ்மா சுவராஜ் லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சை வெடித்தது ,
கடைசியில் பாராளுமன்றத்தில் ராகுலுக்கு  பதிலடி கொடுத்து பஞ்சாயத்தை முடித்தார் சுஷ்மா.

16. இந்த ஆண்டும் டாப் மோஸ்ட் காமெடியன் சுப்பிரமணியம் சுவாமிதான் ,
கல்யாணத்திற்கு தாலியெடுத்துக் கொடுக்கபோய் , தாலி கட்டப்போய் மாப்பிள்ளையை கலங்க விட்டார். 

17. ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்துக்கு சார்ட் தயாரித்தார் . ஊரெல்லாம் நடந்து அவர் ஓட்டு கவர் பண்ண , மீம் தயாரிப்பாளர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டியிருந்தது.

18. பர்மாவில் தேர்தலில்  ஆங் சான் சூகி அபார வேற்றி பெற்றார், ஆனாலும் ரோஹிங்யா  முஸ்லீம்கள் மீதான வன்முறை தொடர்கிறது.

19.  ஐ ஐ டியில்  அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை பா ஜ க முடக்க முயற்சித்தது .

20. ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலால் அமைச்சர்களுக்கு சுகர் குறைந்து பி பி ஏறியது . மக்களின்  முதல்வர் மீண்டும் மாநில முதல்வரானார்.

21. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டார் , நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்ததாக சொல்லி சாகித்ய அகாடமிக்கு விருதுகளை திருப்பி அனுப்பி எதிர்ப்பு காட்டியது அறிவு சார் சமூகம்.

22. உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டது , உள்ளூரில் குடிமகன்களின் யோகாசனங்களும் கூடிக்கொண்டே போகிறது.

23. எதில் எதில் தான் கலப்படம் வரும் என பொதுஜனம் புலம்பும் அளவுக்கு சீனாவிலிருந்து பிளாஸ்டிக்  அரிசி வந்து அதிரச்செய்தது .

24. டாஸ் மார்க்கை  மூடச்சொல்லி தமிழகமெங்கும் போராட்டம் வெடித்தது . 
நடந்த போராட்டங்களில் காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்தார்.

25. பள்ளி மாணவர்கள், மாணவி மது அருந்தும்  காட்சிகள் வாட்ஸ் வெளிவந்தது பரபரப்பு கிளப்பியது. உச்சகட்டமாக 4 வயது சிறுவனுக்கு சொந்த மாமாவே மது ஊற்றிக்கொடுத்த காட்சிகள் பதற வைத்தன.








Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...