காவிரிக்கரைக்காரர்களுக்கு குரல்வளம் சற்று மிகுதி, எட்டுக்கட்டையிலும் பிசிறடிக்காது. "ஏற்கனவே வாங்கியதெல்லாம் படிச்சாச்சு இப்போ புதுசா வேற வாங்கணுமாக்கும், ரெண்டு வருஷத்துக்கு மின்ன வாங்கியதெல்லாம் இன்னும் கவர் பிரிக்காம இருக்கு". இது பொதுவாக கணவர்கள் 'புத்தகக்கண்காட்சிக்குப் போறேம்மா' எனக்குரல் கொடுக்கையில் கிட்டும் எதிரொலி. நான் விதிவிலக்கல்ல.
சக வாசிப்பு தோஷமுள்ள அண்ணன்கள், வாசிப்பு மாரத்தான் என்னும் தொடர் வாசிப்பு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். 48 நாட்களில் நூறு மணிநேர வாசிப்பு என்பது சவால். அனுதினம் குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது வாசிக்கவேண்டும், இச்சங்கிலி அறுபடலாகாது. இற்றைக்கு பதினைந்து நண்பர்கள் இதில் இணைகிறார்கள். நீண்டநாள் கழித்து, அணித்தேர்வுக்கு அழைக்கப்பட்ட விளையாட்டு வீரருக்கான பதற்றத்தில் அனைவரும் புத்தகங்களை தேர்ந்துகொண்டுள்ளனர். படிப்பு மேசையின் விளக்குகள் பழுதுபார்க்கப்படுகின்றன, நண்பர்களின் புத்தக சேமிப்புகள் உளவு பார்க்கப்படுகின்றன. நான் ஒரு தற்காப்பு முயற்சியாக என் மனைவிக்கும் இதை பரிந்துரைத்திருக்கிறேன். ரொம்ம்ம்பக்கஷ்டமானது என்று உதடு பிதுக்கி சொல்லியிருக்கிறேன், ஆகவே அம்மணி பொறியில் விழ வாய்ப்புள்ளது.
நீண்டநாள் கழித்து உற்சாகமான உரையாடல்கள், போட்டி மனப்பான்மை என்பது உண்மையிலேயே ஆரோக்கியமான சொல்தான் போல. அலமாரியிலுள்ள புத்தகங்களை எல்லாம் வாசித்து முடித்து, ஜனவரி புத்தகக்கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை மனைவியிடம் நீட்டுவதுபோல கனாக்காண்கிறேன். பேராசை.

Comments
Post a Comment