பறை, துடி, மிருதங்கம், தவில், தர்புகா, கடம், டிரம்ஸ் முதலிய தாளக்கருவிகள் இசைத்துறையில் உண்டு. ஈசன் திருஞான சம்பந்தருக்கு தம்பி கையால் தாளமிடாதே என்று பொற்தாளம் வழங்கினாராம்.
லயம் பிதா என்ற பழமொழி இதற்குப் பின்னால் வந்தது.
தாள வகைகள் இத்தனை என்று கர்னாடக இசை கற்கையில் சொல்லித்தருகிறார்கள். என் மேலாளர் இதையெல்லாம் அறிந்தவரா எனத்தெரியாது.
அயலூர் உயர்மேலாளர் ஸ்ரீ ஒருவர் அலுவலக கட்செவிக் குழுமத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார். அதில் அவரது அருந்தவப் புதல்வி கிரித்தவ தேவதைகளுக்கான லட்சணங்கள் பொருந்த உடையணிந்திருந்தார்.
அவர் பள்ளியில் நடைபெறும் ஆங்கில நாடகத்தில் அவர் ஒரு இறைத்தூதுவராக தோன்றியிருப்பார் போல. குழுவின் நண்பர்கள் அவரவர் அளவில் பாராட்டிக்கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் தொலைவிலிருந்த நமது மேலாளர் அனைவரையும் பிடித்துத்தள்ளிவிட்டு மூச்சிரைக்க முன்வந்து தனது வாழ்த்துதலை இட்டிருக்கிறார்.
"இவ்வாறே தொடர்ந்து தூதராகி பிற்காலத்தில் நீங்கள் அமெரிக்காவுக்கான வெளியுறவுத் தூதராக வேண்டுகிறேன்"
Comments
Post a Comment