அலுவலகத்தில் அலுவலக நண்பர் ஒருவர் திருமண பத்திரிகை வைத்துக்கொண்டே வந்தார், ( அலுவல் நேரத்தில் தான் ). என்னருகில் வந்த போது பத்திரிகை தீர்ந்திருந்தது, விருட்டென்று வெளிச்சென்றவர் மீண்டு வரவில்லை .
வீட்டுக்கு வந்த பின், போனில் பேசியவர் பத்திரிகை தீர்ந்து விட்டதாகவும் பத்திரிகை வைக்காததால் வராது இருந்துவிட கூடாது , அது நம் கலாச்சார விழுமியங்களுக்கு நாம் செய்யும் குற்றம் எனவும் அறிவுறுத்தினார் .
அதையும் கல்யாணத்திற்கு வருவதையும் ஒப்புக்கொண்டு போவதற்கு மறந்து விட்டேன் ,
ஐயகோ.. இது தீராப்பழி !
Comments
Post a Comment