Skip to main content

Posts

Showing posts from July, 2019

மாற்றுவழி

அலுவலகத்தின் முதன்மை தகவலாளியான அம்மிணி, பூர்வாசிரமத்தில் வில்லுப்பாட்டுக்கலையில் தேர்ச்சி பெற்றவர். தெளிவாக சொல்வதானால் பாடுவதில் அல்ல, அருகில் அமர்ந்து "ஆமாமா"  மற்றும் "அப்புறம்" போன்று கதைவளர்த்துச் செல்லும் சொற்குவை தளத்தில்தான்  அவர் முதுகலை முடித்திருக்கிறார். நிறுவனத்தின் நட்டத்தை அளவிட வந்த வெளியூர் ஆட்டக்காரர் அம்மணியைப் பார்த்து அருகில் வந்தார். வியந்து நோக்கினார். உதடு விரிந்தது. ஆற்றாமையோடு  சொன்னார்,  இன்னுமா நீ இந்தக் கம்பெனியில இருக்க என்று. பெருமிதத்தோடு எங்களையெல்லாம் பார்த்த அம்மணி , அவரிடம் திரும்பி "வேறுவழி" என்றாள்.  

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

ஒரு ஹிச் ஹைக்கிங் பயணியுடன்

நண்பர் சிரிஷ் யாத்ரி இந்தூரைச் சேர்ந்த இளைஞர்(21). ஹிச் ஹைக்கிங் -  hitch hiking முறையில் இந்தியா முழுமையும் பயணிப்பவர். பயணத்திற்கு பணம் தேவையில்லை என்று நிறுவும் பயண முறை இது. லிப்ட் கேட்டு ஒரு இலக்கிற்கு செல்வது பின் அங்கிருந்து மீண்டும் லிப்ட், முழுப்பயணமும் இப்படித்தான். உணவு பயணத்தில் இரண்டாம்பட்சம்,  யாரேனும் உணவு வாங்கிக் கொடுத்தால், ஏற்றுக்கொள்வார்.   ஹிப்பித்தன்மை கொண்ட இம்முறை வெளிநாடுகளில் பயணிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இப்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. ஒருவகையில் நமது துறவிகள், புனிதத்தல யாத்ரீகர்கள் பயணங்களோடு நெருங்கிய தொடர்பு உள்ள பயண முறை. எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் இவரைப்பற்றிய செய்தி வந்திருந்தது. சிரிஷ் தன பயணத்தினூடாக புதுவை வந்தார். அவரைச் சந்தித்தோம், வில்லியனூரில் எனது வீட்டில் தங்கினார். அவரது வருகையும் ஒரு சிறிய உரையாடலும் இங்கு பதியப்பட்டுள்ளது. சிரிஷ் யாத்ரியை நாங்கள் கண்டது நண்பர் மணிமாறனின் அலுவலக வாசலில், எந்தப்பூதம் சுமந்து வந்தது என்று தெரியாது, சரியான இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்திருந்தார்.சிரிஷை பற்றி ப

எல்லோரும்

மேலாளர் அடிக்கடி என்னை அழைத்து கேட்கும் கேள்வி இது மொபைல் ஏதாவது பிரச்சனையா " ஒற்றைச்சொல்லில் சுருக்கமாக பதிலை நாடும் கேள்வி நேற்று நான் கூப்பிட்டப்போ ஏன் எடுக்கல " நீங்கள் நள்ளிரவு சம்போகத்திலிருந்தாலும் உதறி எறிந்துவிட்டு போனை எடுத்து பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை என்பது அவர்களது உறுதிப்பாடு. நேற்று மேலாளர் விடுமுறை, மூத்தமேலாளர் அழைத்தார்.  என்ன கவிதை எழுதியிருக்கான் உங்காளு? சீர் தளை எதுவும் மனசிலாகலை. அப்பிடியே மேலே அனுப்சா என்ன அனுப்சுருவான். எட்டிப்பார்த்தேன் எஸ்செல்லில் வழக்கமாக  மேலாளர் இழைக்கும் சூத்திரப் பிழைதான். சரிசெய்தென். மூ மேலாளர்,  'சரி போ, போனடிச்சாலும் எடுக்கானா பாரு உங்காளு என்றார். அவரும்  இந்நாட்டு மன்னர் தானே. 

கலிகாலம்

நேற்று  அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்ததா என்றார் மேலாளர். ஆம் அந்தத்தகவலை ஏன் என்னிடம் சொல்லவில்லை அமைதி நான் கூட்டத்தில் .. அந்தக்கூட்டத்தை நடத்த நான் எவ்வளவு முயற்சித்தேன் தெரியுமா, நான் இல்லாத வேளையில், எனக்குத்தெரியாமல் நடத்தி விட்டார்கள், எல்லாரும் நம்பிக்கை மோசம் செய்கிறார்கள். இல்லை நான் .. நீயும் சேர்ந்து இப்படியெல்லாம் செய்வது வருத்தமாக இருக்கிறது. மூத்த மேலாளருக்கும் கொஞ்சம் கூட புத்தி அறிவு வேண்டாமா, நான் எவ்வளவு முக்கியமானவன். குரல் கம்மியது. முகம் சிவந்தது. அருகில் அம்மணி நின்று புன்னகைத்தாள். பாவம்தான்.  காத்திருந்து செய்திருக்கிறார்கள்.

லாபம்

அம்மணி ஒருவர் உடன் பணிபுரிகிறார். அலுவலகத்தின் முதன்மை தகவல்சொல்லி அவர்தான். யாவரும் அவள்மேல் பாசமழை பொழிகிறார். நேற்று என்னைப்பார்த்து சிரித்தார், கடன்காரனுக்கு ஈயும் அசட்டுச்சிரிப்பை பதிலளித்தேன். மாலை மேலாளர் அழைத்து எனது தகவல் தொடர்பு முறை மிகமோசம் என்று வசைந்தார். ஹும், என்ன லாபம்.

கலைச்சொல்

மூத்த மேலாளருக்கு ரத்தக்கொதிப்பு உண்டு, பாரியான சரீரம், ஒரு மூன்று, நான்கு நாடி சரீரம். யார் அழகாகப் பாடினாலும் அவருக்குப் பிடிக்காது, சுரேஷ் இன்றுவரை அவரால் மூக்கறுக்கப்படுகிறான், ம்  ஆணென்பதால் அவ்வளவுதான். விசாரித்ததில் தெரியவந்தது, மேலாளர் முந்தைய பணியிடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் என்று புகழப்பட்டவர். சொன்னதையே சொல்லவேண்டாம் பாருங்கள், இன்றைய துதிபாடிகளுக்கு மேலும் ஒரு கலைச்சொல்.

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

யாளி சூழ் உலகு ஶ்ரீவைகுண்டம்

நண்பரது திருமணத்துக்கு தென்பாண்டிநாட்டுக்கு செல்லவேண்டியிருந்தது, புலரியில் திருச்சீர் அலைவாய்ப்பெருமாளை  வணங்கிவிட்டு ஸ்ரீவைகுண்டம் சென்றிருந்தேன். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அழகிய தலம் ஸ்ரீவைகுண்டம், வைணவர்கள் வணங்கும் நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்று. நெல்லைச்சீமை நவ திருப்பதிகளில் சூரியனுக்குண்டான பதி. பாலத்தில் நடந்தபடி ஸ்ரீவைகுண்டம் அணையை பார்த்துக்கொண்டே சென்றேன். உச்சிவெயிலில் பொருநையில் இளவட்டங்கள்  நீந்திக்களித்துக்கொண்டிருக்க, கரையோரத்தில் பெண்களும் குழந்தைகளும் கூச்சலோடு விளையாடிக்கொண்டிருந்தனர். நீரின் மடியில் அவர்கள் நின்றுகொண்டு  "போவே" என்று ஞாயிறைப் பழித்துக்காட்டியது போல் தோன்றியது, பொறாமையாகவும் இருந்தது .  வைகுந்தவாசன் என்றால் அமர்ந்திருக்கப்பட்டது தானே சரி,  ஆனால் நம்மாழ்வாரால் "வைகுந்தத்துள் நின்று" என்று பாடியபடிக்கு கொஞ்சம் நிக்கலாம்டே என்று நின்றகோலத்தில் பெருமாள் அருள்கிறார்.  திருமால் படுத்தால் படுக்கை , இருந்தால் இருக்கை, நின்றால் குடையாவேன் என்று  பின்னே ஆதிசேஷன் குடையாகி  நிற்கிறார். திருவழுதி வளநாட்டின் வைகுந்தநாதருக்கு