மேலாளர் அடிக்கடி என்னை அழைத்து கேட்கும் கேள்வி இது
மொபைல் ஏதாவது பிரச்சனையா "
ஒற்றைச்சொல்லில் சுருக்கமாக பதிலை நாடும் கேள்வி
நேற்று நான் கூப்பிட்டப்போ ஏன் எடுக்கல "
நீங்கள் நள்ளிரவு சம்போகத்திலிருந்தாலும் உதறி எறிந்துவிட்டு போனை எடுத்து பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை என்பது அவர்களது உறுதிப்பாடு.
நேற்று மேலாளர் விடுமுறை, மூத்தமேலாளர் அழைத்தார்.
என்ன கவிதை எழுதியிருக்கான் உங்காளு? சீர் தளை எதுவும் மனசிலாகலை. அப்பிடியே மேலே அனுப்சா என்ன அனுப்சுருவான்.
எட்டிப்பார்த்தேன் எஸ்செல்லில் வழக்கமாக மேலாளர் இழைக்கும் சூத்திரப் பிழைதான். சரிசெய்தென்.
மூ மேலாளர், 'சரி போ, போனடிச்சாலும் எடுக்கானா பாரு உங்காளு என்றார்.
அவரும் இந்நாட்டு மன்னர் தானே.
Comments
Post a Comment