மேலாளர் அழைத்தார் என்ன என்றேன்,
நான் இரு நாட்களாக இங்கில்லை, லீவ் என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன்.
எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை.
உற்றுப்பார்த்தேன், ஆம்.
தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது.
ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய.
"சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.
Comments
Post a Comment