மனங்களில் மனிதம் மலர்ந்த 2015 இந்த வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் , எல்லாம் கடந்து கண்ணை மூடினால் நினைவில் நிற்பது இரண்டுதான் . மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை. மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை. தெய்வம் என்ற ஒன்றை சகமனிதனிடம் நேரில் கண்ட வருடம் இது. எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும். அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார். இங்கு எத்தனையோ பிறர் இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம் கடந்து மனிதர்கள் கண்ணீர் உகுத்தது நம் வாழ்நாளில் நாம் காணாதது . ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன் சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது. அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை , பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை , தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும்